130கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் – சென்னை முழுவதும் பலத்த மழை.!

130கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் நகர்ந்து கரையை கடக்க உள்ளதால் சென்னை முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டது. மணிக்கு எட்டு…

130கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் நகர்ந்து கரையை கடக்க உள்ளதால் சென்னை முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டது. மணிக்கு எட்டு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இப்புயல் நெல்லூர்- மசூலிப்பட்டிணம் இடையே கரையை கடக்க உள்ளது.  இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று  இரவு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்துள்ளது. நேற்று  ஆறு மணி நேரமாக புயலின் நகரும் நேரமானது குறைவாக உள்ளது. இதனால் புயல் மிகவும் வலுவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக ஆந்திரா ஒட்டியுள்ள பகுதிகளில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

புயல் கடக்கும் போது சென்னையில் காற்றும் மழையும் பரவலாக இருக்கும். ஒரு சில பகுதியில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்யும். பொதுவாக இன்று இரவு வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 150 முதல் 160 கிலோமீட்டர் வரை புயல் நெருங்கிய நிலையில் தற்போது 130 கீமி வரை சென்றுள்ளது. வடக்கு வட மேற்கு திசையில் தற்பொழுது புயல் நகர்ந்து வருகிறது.

மிக்ஜாம் புயலானது இன்று முற்பகல் வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் நிலைகொள்ளும். கரைக்கு இணையாக நகர்ந்து  டிசம்பர் 5ம் தேதி முற்பகல் நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும்.

இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி கிட்டத்தட்ட இணையாகவும், தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு நெருக்கமாகவும் நகர்ந்து, நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை டிசம்பர் 5 ஆம் தேதி முன் மதியம் ஒரு கடுமையான சூறாவளி புயலாகக் கடக்கும், அதிகபட்சமாக 90-100 கிமீ வேகத்தில் 110 வரை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.