நாட்டையே உலுக்கிய கோர ரயில் விபத்துகள்!

கோரமண்டல் ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் பற்றி விரிவாக பார்க்கலாம். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா…

கோரமண்டல் ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் பஹனகா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டன. அதே நேரத்தில் மற்றொரு தடத்தில் வந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம்புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது.

இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோரமண்டல் ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த மிகப் பெரிய ரயில் விபத்துகளை பார்க்கலாம்….

  • 1981 ஜூன் மாதம் பீகாரில் பயணிகள் ரயில் தடம்புரண்டு பாக்மதி நதியில் விழுந்ததில் 800 பேர் வரை உயிரிழந்தனர்.
  • 1985, ஆகஸ்ட் மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த புருஷோத்தமன் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 350 பேர் உயிரிழந்தனர்.
  • 1999 ஆகஸ்ட் மாதத்தில் அசாமில், அவாத் அசாம் எக்ஸ்பிரஸ் ரயில் பிரம்மபுத்திரா ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 268 பேர் உயிரிழந்தனர்.
  • 1998 நவம்பர் மாதத்தில் பஞ்சாப்பில் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு நின்று கொண்டிருந்த கோல்டன் டெம்பிள் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 212 பேர் உயிரிழந்தனர்.
  • 2010 மே மாதத்தில் மேற்கு வங்கத்தில் ஹவுரா சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரயில் வெடி விபத்தால் தடம் புரண்டதில் 170 பயணிகள் பலியாகினர்.
  • 1964 டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் பாம்பன் தனுஷ்கோடி எக்ஸ்பிரஸ் புயலால் விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.
  • 2016 நவம்பர் மாதத்தில் இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ், கான்பூரில் புக்ராயன் அருகே தடம் புரண்டதில் 150 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • 2002-ம் ஆண்டு ராஜ்தானி எக்ஸ்பிரஸ், ரஃபிகஞ்ச் ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
  • 1954 செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத் அருகே பயணிகள் ரயில், யசந்தி நதி பாலத்தின் மேல் சென்றுக்கொண்டிருந்தபோது பாலம் உடைந்ததால் விபத்துக்குள்ளானது. இதில் 139 பேர் உயிரிழந்தனர்.
  • 1956 செப்டம்பர் மாத்தில் ஆந்திராவில், பாலம் உடைந்ததால் பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதில் 125 பேர் பலியாகினர்.
  • 1937 பீகாரில், கல்கத்தாவிலிருந்து பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 119 பேர் உயிரிழந்தனர்.
  • 2010 ஜூலை மாதத்தில் மேற்கு வங்காளத்தின் சைந்தியாவில் உத்தர பங்கா எக்ஸ்பிரஸ் மற்றும் வனஞ்சல் எக்ஸ்பிரஸ் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 63 பேர் உயிரிழந்தனர் மற்றும் 165 பேர் காயமடைந்தனர்.
  • 2018 அக்டோபர் மாதம் அமிர்தசரஸ் அருகே தசரா கொண்டாட்டத்தின் போது தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
  • 2012 மே மாதத்தில் ஹூப்ளி-பெங்களூரு ஹம்பி எக்ஸ்பிரஸ் ஆந்திரப் பிரதேசம் அருகே சரக்கு ரயில் மீது மோதிய விபத்தில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 43 பேர் காயமடைந்தனர்.
  • 2022 ஜனவரி மாதத்தில் மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவாரில் பிகானேர்-குவஹாத்தி எக்ஸ்பிரள்  தடம் புரண்டதில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.