CUET தேர்விற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கட்டாயமில்லை என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேருவதற்கு CUET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது 10-ம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2021-ம் ஆண்டு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த ஆண்டு 12-ம் வகுப்பு எழுதவுள்ளனர். 2021ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை.
தற்போது CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என்பதால் விண்ணப்பிப்பதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிக்கல் எழுந்தது. இதையடுத்து இந்த விதிமுறையில் தளர்வளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனிடையே, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன், நியூஸ் 7 தமிழிற்கு தொலைபேசி வாயிலாக பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கட்டாயமில்லை என தெரிவித்தார்.