புயலிலும் மக்கள் நலனை எண்ணிப் பாராமல் அரசியல் செய்ய நினைத்தால் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் , உயிரிழப்புகளை தடுத்து ஒட்டுமொத்த மக்களை பாதுகாத்த தமிழக அரசின் மீது திமுக தலைவர் ஸ்டாலின் வீண்பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் நிவர் புயல் தாக்குதலால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படாத வண்ணம் முதலமைச்சர் போர்க்கால நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்ட அமைச்சர் நிவர் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து அதன்மூலம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 398 நபர்கள் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசின் போர்க்கால நடவடிக்கைகளை தெரிந்து கொண்டே ஸ்டாலின் மனசாட்சி இல்லாமல் அரசியல் செய்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.







