
செண்பகத்தோப்பு அணையிலிருந்து 6 ஆயிரம் கன அடி உபரி நீரை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி செண்பகத்தோப்பு அணைக்கு கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால், 16 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள 7 புதிய ரேடியல் ஷட்டர்கள் வழியாக, முதல் முறையாக 48 ஏரிகளுக்கு 6 ஆயிரம் கன அடி உபரி நீரை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், அணையிலிருந்து கூடுதல் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







