விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து வந்த இளைஞர், பேருந்தின் முன் பாய்ந்து உயிரிழப்பு !

சென்னையில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்த இளைஞர், ஓடும் பேருந்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் லால் பகதூர் சாஸ்திரி சேர்ந்தவர் சதிஷ்குமார். இவர் தனது…

சென்னையில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்த இளைஞர், ஓடும் பேருந்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்
கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் லால் பகதூர் சாஸ்திரி சேர்ந்தவர் சதிஷ்குமார். இவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க சென்ற செம்மஞ்சேரி போலீசார், சதிஷ்குமாரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

போலீசார் விசாரணையினால் மனமுடைந்த சதிஷ்குமார், காவல் நிலையம் முன்பாக சென்ற மாநகர பேருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்
கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சதிஷ்குமாரின் மரணத்திற்கு போலீசார்தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply