ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததை நினைத்து, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது, என தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பது, வரும் சட்டமன்ற தேர்தலிலும் நிரூபணம் ஆகும் என்றார்.
திமுகவை தோற்கடிக்க சிலரை கட்சி ஆரம்பிக்க கட்டாயப்படுத்துகின்றனர், என ரஜினி குறித்து மறைமுகமாக மு.க.ஸ்டாலின் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும், அதனால் தான் இவ்வாறு பேசுகிறார் என்றும், அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவிரித்தார்.







