வேளாண் சட்டம் குறித்து தவறான தகவல்களை பொதுமக்களிடம், ஸ்டாலின் பரப்பி வருவதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், ஆனால், சட்டத்தை வாபஸ் வாங்க முடியாது என தெரிவித்தார். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும், என்றுதான் மத்திய அரசு வேளாண் சட்டத்தை கொண்டு வந்ததாக ஹெச்.ராஜா குறிப்பிட்டார். வேளாண் சட்டம் குறித்து தவறான தகவல்களை மக்களிடம் ஸ்டாலின் பரப்புவது ஏன், என கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, யார் விவசாயம் செய்யவில்லையோ, அவர்கள் தான் போராட்டம் நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.







