முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும், என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூரில், விவசாயிகள் உடனான கலந்துரையாடலுக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வணிகர்களாகவும் மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார். புதிய தொழில்நுட்பங்களால் இரட்டிப்பு மகசூல், உள்ளிட்ட பல நன்மைகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்றும் பாஜகவுக்கு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள, நல்ல பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, திமுக போராட்டங்களை நடத்துவதாகவும், அவர் கூறினார். சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய கூட்டணியே தொடரும், என குறிப்பிட்ட எல்.முருகன், யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை, பாஜகவின் தேசிய தலைமையே முடிவு செய்யும் என்றார். மேலும், தமிழகத்தில் வேல் யாத்திரை, மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், எல்.முருகன் பெருமிதம் தெரிவித்தார்.







