மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்:பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

இந்திய தயாரிப்பான கொவேக்சின் கொரோனா தடுப்பூசி மருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன்…

இந்திய தயாரிப்பான கொவேக்சின் கொரோனா தடுப்பூசி மருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. பல்வேறு கட்ட சோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசிடம் அனுமதி கோரப்பட்டது. கோவேக்சின் தடுப்பு மருந்து குறித்து ஆஸ்திரேலியா, பிரேசில் உள்ளிட்ட 64 நாடுகளின் தூதர்கள் இன்று ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த தரவுகளின்படி, கொவேக்சின் தடுப்பூசி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், அரசின் திட்டப்படி தடுப்பூசி போடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுமென்றும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எல்லா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply