மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா உடலுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான யசோதா, 4 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ள யசோதாவின் மறைவிற்கு, காங்கிரஸ் தலைவர்களும், பிற அரசியல் கட்சித் தலைவர்களும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கேவி தங்கபாலு, திருநாவுக்கரசர், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தலைவர்களும், யசோதாவின் உடலுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.







