மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆயுர்வேதா,சித்தா, யுனானி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருவள்ளூரில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுர்வேத மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும்…

ஆயுர்வேதா,சித்தா, யுனானி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருவள்ளூரில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயுர்வேத மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இதனால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பாக அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், ஆயுர்வேத, சித்தா யுனானி போன்ற வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களை அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கலாம் என்ற சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்

இந்த திட்டம் நடைமுறைக்கு வருமேயானால் சாதாரண நோயாளிகள் முதல் அறுவை சிகிச்சை நோயாளிகள் வரை அனைவரும் பாதிக்கப்படுவார்கள். பல ஆண்டுகள் முறையான பயிற்சி பெற்று அனுபவம் பெற்று மூத்த மருத்துவர்களின் ஆலோசனையின் படி அறுவை சிகிச்சை செய்து வரும் தங்களுக்கே பல சவால்களை எதிர்கொண்டு செயல்படுவதாகவும், தற்போது புதிய புதிய நோய்கள், வைரஸ,கிருமிகள் பரவி வரும் நிலையில் அனுபவமில்லாத ஆயுர்வேத மருத்துவர்கள் எப்படி சாதிக்க முடியும் என்றும் அவரவர் வைத்திய முறையை பின்பற்றினாலே போதுமானது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply