மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தட்டி கேட்கும் நீதிமன்றமாக செயல்பட வேண்டும்!: துணை முதல்வர் ஓ.பி.எஸ்

மகளிர் சுய உதவி குழுக்கள் அந்த பகுதிகளில் நடக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தட்டி கேட்கும் நீதிமன்றமாக, செயல்பட வேண்டும், என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில், திட்டம்…

மகளிர் சுய உதவி குழுக்கள் அந்த பகுதிகளில் நடக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தட்டி கேட்கும் நீதிமன்றமாக, செயல்பட வேண்டும், என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஏடிஜிபி சீமா அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், பெண்களை அடிமையாக வைத்திருக்க நினைப்பவர்களால் தான், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதாகவும், இதை சீர்படுத்த வேண்டியது நமது கடமை, என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply