தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் சேர நாளை முதல் https://tneaonline.org/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் 19ந்தேதி வரை இணைய தளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாகவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நாளை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் சூழலில், நாளைய தினமே கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. ஜூலை 20ந்தேதி முதல் 31 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும் ரேண்டம் எண் ஜூலை 22-ல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ந்தேதி முதல் 18ந்தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ள உயர் கல்வித்துறை, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ந்தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது.







