பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது-பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு அருகேயுள்ள சுதான் பத்தேரி பகுதியில் கடந்த ஒன்றரை…

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு அருகேயுள்ள சுதான் பத்தேரி பகுதியில் கடந்த ஒன்றரை மாதங்களாக புலி ஒன்று அச்சுறுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து பகல் நேரங்களிலேயே வீடுகளிலேயே முடங்கும் அபாயம் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியிலுள்ள வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை அடித்து கொன்று வந்தது.

அங்குள்ள கோழிப்பண்ணைகளில் புகுந்து கோழிகளை வேட்டையாடி வந்தது. புலியை பிடிக்க வனத்துறையினர் எவ்வளோ முயன்றும் வனத்துறையினர் கண்களில் மண்ணை தூவி விட்டு புலி சுற்றி வந்தது.இந்நிலையில் புலியை பிடித்தே தீர வேண்டும் முடிவு செய்த கடந்த ஒரு வார காலமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் கூண்டு அமைத்தும்,கேமராக்களை வைத்தும் கண்காணித்து வந்தனர். தீவிர தேடுதலுக்கு பின்னர் இன்று மூலங்காவு பகுதியிலுள்ள கோழிப்பண்ணையின் அருகே வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி சிக்கியது. தொடர்ந்து வனத்துறையினர் புலியை பச்சாணியில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.