சென்னை மந்தைவெளியில் கணவனுக்கு தெரியாமல் பேஸ்புக் நண்பரிடம் 51 லட்சரூபாய் கொடுத்துவிட்டு உறவினர் திருடியதாக நாடாகமாடிய பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மந்தைவெளி பெரிய பள்ளி தெருவில் வசித்து வருபவர் தமீம் அன்சாரி. தொழிலதிபரான இவரது இல்லத்தில் வைத்து சில தினங்களுக்கு உறவினருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு கடந்த 20 ஆம் தேதி வீட்டில் வைத்திருந்த 51 லட்ச ரூபாய் பணம் காணாமல் போனதாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் தமீம் அன்சாரி புகார் அளித்திருந்தார்.
தமீம் அன்சாரியின் சகோதரியின் கணவர் பணத்தை திருடியதாக, அன்சாரியின் மனைவி கன்ஸீம் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணையில் கன்ஸீம் பொய்குற்றச்சாட்டு தெரிவித்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து அவரின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதனை ஆய்வு செய்தபோது பணம் திருடு போன நேரத்திலும் அதற்கு முன்பும், பின்பும் கன்ஸீம் தொடர்ந்து ஒரு நபரிடம் பேசியதை கண்டுபிடித்தனர். அந்த நபர் குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடமிருந்த 51 லட்ச ரூபாயினை பறிமுதல் செய்தனர்.
பேஸ்புக் மூலமாக பெண்களிடம் நட்பாக பழகி பணம் பறிக்கும் செயலில் ரியாஸ் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவர் எதற்காக கன்ஸீமை மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







