புத்தாண்டு அன்று வாகனங்களில் சாகச முயற்சிகளில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல்!

சென்னையில் புத்தாண்டு தினத்தன்று வாகனங்களில் சாகச முயற்சிகளில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு…

சென்னையில் புத்தாண்டு தினத்தன்று வாகனங்களில் சாகச முயற்சிகளில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், சென்னை புதுப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், விடுதிகள், ரிசார்ட்டுகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது என தெரிவித்தார். கடந்த 8 மாதங்களாக மக்கள் ஒத்துழைப்பு அளித்தது போன்று, புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், தடையை மீறி, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது கூடாது என தெரிவித்தார். வாகனங்களை வைத்து சாகசங்களில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறிய அவர், கொண்டாட்டங்களை தடுக்க 300 இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply