புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் டி.ராஜேந்தர் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இந்நிலையில் அதில் டி.ராஜேந்தர் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் தனது தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் ஒன்றையும் தொடங்கினார். ஏற்கனவே திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருந்து வரும் டி.ராஜேந்தர், விதிமுறைகளின் படி வேறு எந்த சங்கத்திலும் பதவி வகிக்க கூடாது என்பதால், புதிய தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.







