பயனாளிகளின் விவரங்கள் – 5 ஆண்டுகளுக்கு சேமிக்க அரசு உத்தரவு

Virtual Proxy Networks(VPN) எனப்படும் இணைய வழியில் பயனர்களின் தகவல்களை சேகரிக்கும் நிறுவனங்கள், தங்களது தரவுகளை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து வரும்…

Virtual Proxy Networks(VPN) எனப்படும் இணைய வழியில் பயனர்களின் தகவல்களை சேகரிக்கும் நிறுவனங்கள், தங்களது தரவுகளை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை வழங்க, பயனர்களின் தகவல்களை சேகரிப்பது வழக்கத்தில் இருக்கிறது.

இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள், சிலரால் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்ததை அடுத்து, அனைத்து VPN நிறுவனங்களுக்கும், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடந்த வாரம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், சேகரிக்கப்படும் பயனர்களின் தகவல்கள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவையைப் பெறுவதற்காக தங்கள் தகவல்களை அளிக்கும் பயனர்கள், பின்னர் அந்த நிறுவனத்தின் கணக்கை முடித்துக்கொண்டாலும், அவர்கள் அளித்த தகவல்களை அந்த நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. விதிமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கவும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவு, சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கும் பயனர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

5 ஆண்டுகளுக்கு தரவுகளை சேமிப்பது கட்டாயமாக்கப்படுவதால் அதற்கு ஏற்ப சர்வர் கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டிய நெருக்கடி நிறுவனங்களுக்கு ஏற்படும் என்றும், இதனால், சேவையை பெறுபவர்களிடம் கட்டணம் அல்லது கூடுதல் பெற வேண்டிய அவசியத்திற்கு நிறுவனங்கள் தள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

அரசின் நடவடிக்கை, பயனர் தரவுகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் என்றாலும், அதற்கான விலையை பயனர்கள் கொடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் என்று நிறுவனங்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.