குடியரசு தின விழாவில் விவசாயிகளின் பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடு பெயரில் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு விவசாய மாநாடுகளை நடத்தியவர் சி.நாராயணசாமி நாயுடு என புகழாரம் சூட்டினார். விவசாயிகளுக்காக பாடுபட்டு அவர் இன்னுயிர் நீத்ததாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். குடியரசு தின விழாவில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருது, இந்தாண்டு முதல் சி.நாராயணசாமி நெல் உற்பத்தி திறனுக்கான விருது என்ற பெயரில் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.







