நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து…

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். அதில், ‘ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பதிவில், ‘தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் அன்பு சகோதரர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் , ‘அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்’ என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply