தேர்தல் தேதி அறிவித்த பிறகே அதிமுகவில் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் அம்மா மினி கிளினிக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும், தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமையும் என கூறினார். கூட்டணி இறுதி செய்த பிறகே கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பரப்புரை நடைபெறும் என தெரிவித்த அவர், அதிமுக நடத்தும் கூட்டம் எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.







