திருமணத் தடை நீக்கும் நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவக் கொடியேற்றம்!

108 திவ்ய தேசங்களில் 62-வது திவ்ய தேசமாக விளங்கும் திருமணத் தடை நீக்கும்  திருவிடந்தை நித்யக் கல்யாண பெருமாள் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில்,…

108 திவ்ய தேசங்களில் 62-வது திவ்ய தேசமாக விளங்கும் திருமணத் தடை நீக்கும் 
திருவிடந்தை நித்யக் கல்யாண பெருமாள் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ
பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில், 108 திவ்ய
தேசங்களில் 62 வது திவ்ய தேசமாக விளங்கும் திருமங்கை ஆழ்வாரால் பங்களா சாசனம் பாடப்பட்ட ஸ்தலமாகவும் திருமணத் தடை நீக்கும் பரிகார ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்று நித்தியக்கல்யாண பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

திருமணம் விரைவில் நடைபெறவேண்டி பலரும் இக்கோயிலுக்கு வருவது இக்கோயிலின் முக்கிய சிறப்புகளில் ஒன்றாகும். தொல்லியல்துறை மற்றும் அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு சிறப்பு வழிபாடுகளுடன் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உற்சவர் நித்திய கல்யாண பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார் திருவீதி உலா நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெற உள்ள உற்சவத்தில் தினமும் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்வான கருடசேவை 08-ம் தேதியும், திருத்தேர் விழா 10-ம் தேதியும், தெப்ப உற்சவம் 13-ம் தேதியும் நடைபெற உள்ளது. கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.