தாடி வளர்ப்பதன் ரகசியம் என்ன? நடிகர் கமல் விளக்கம்!

தாடி வளர்ப்பது குறித்து நடிகர் கமல் விளக்கம் அளித்துள்ளார். கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் விக்ரம் 2.…

தாடி வளர்ப்பது குறித்து நடிகர் கமல் விளக்கம் அளித்துள்ளார்.

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் விக்ரம் 2. இந்த படம் கமல்ஹாசனே எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூலை வாரிக்குவித்தது.

இதனையடுத்து கமலின் மார்க்கெட் மீண்டும் அதிகரித்தது.
இந்தியன் -2க்குப் பிறகு கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது

இந்நிலையில், சைமா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மணிரத்னத்திடம் கமல் 234 படம் குறித்த அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ளார். சுதாரித்த மணிரத்னத்திடம் படத்தின் தயாரிப்பாளரிடம் கேளுங்கள் என்றார்.

இதனைத்தொடர்ந்து கமல் கூறியதாவது :

ஒரு நிஜமான ரசிகன் என்ன செய்ய வேண்டுமோ அதை லோகேஷ் சரியாக செய்துவிட்டார் என நினைக்கிறேன். நாயகன் படத்துக்கு எப்படி வேலை பார்த்தோமோ அப்படிதான் இதற்கும் வேலை பார்த்து வருகிறோம். எங்களிடம் எந்த பதற்றமும் இல்லை.
உங்களிடையே தலை நிமிர்ந்து நிற்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம். இந்த தாடி கூட அதற்காகத்தான். எதையெல்லாம் வளர்க்க முடியுமோ அதையெல்லாம் வளர்த்து வருகிறோம் கமல் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.