கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 6,618 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக பதிவாகிவுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 87,767 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 6,618 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,33,434 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 12,908 ஆக உயிர்ந்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,314 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 41,955 ஆக உயர்ந்துள்ளது.







