சேலத்தில் பெற்ற குழந்தையை பணத்திற்காக தந்தை விற்ற நிலையில், தாய் அதனை அறியாமல் குழந்தையை தேடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஜய். கூலித்தொழிலாளியான இவருக்கும் இவரது மனைவி சத்யாவுக்கு நவம்பர் 1ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால் 3வதாக பிறந்த குழந்தையை தங்கள் வீட்டிற்கு அருகே வசித்து வரும் வெங்கடேசன்- கோமதி தம்பதிக்கு 1,20,000 ரூபாய்க்கு தந்தை விஜய் விற்றுள்ளார்.
இதை அறியாத தாய் சத்யா, குழந்தையை காணவில்லை என அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது. மேலும் அந்த குழந்தை தெலங்கானாவுக்கு அனுப்பப்பட்டதும் தெரியவந்தது. குழந்தையை மீட்ட போலீசார், கோமதி, நிஷா எனும் இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தந்தை விஜய் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.







