“சித்ராவின் மறைவுக்கு அவர்தான் காரணம்” சித்ராவின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு வழக்கு தொடர்பாக ஆர்டிஓ விசாரணை தொடங்கியது. சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் நடிகை சித்ரா, தூக்கிட்டு உயிரிழப்பு செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனையில் உயிரிழப்பு…

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு வழக்கு தொடர்பாக ஆர்டிஓ விசாரணை தொடங்கியது.

சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் நடிகை சித்ரா, தூக்கிட்டு உயிரிழப்பு செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனையில் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சித்ராவின் மரணம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆர்டிஓ விசாரணை தொடங்கியது. விசாரணைக்காக சித்ராவின் தாய் விஜயா, தந்தை காமராஜ் மற்றும் அவரது சகோதரி சரஸ்வதி ஆகியோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்ராவின் தாய் விஜயா, சித்ரா மரணத்திற்கு முழுக்க, முழுக்க அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என தெரிவித்தார். இறப்பதற்கு முன்னர் சித்ரா தன்னிடம் செல்போனில் பேசியதாக கூறிய அவர், தன்னிடம் எந்த பிரச்னை குறித்தும் தெரிவிக்கவில்லை என்றும், மன உளைச்சலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply