சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவர்கள் – சென்னையில் உற்சாக வரவேற்பு!

பெங்களூருவில் நடைபெற்ற இலங்கை, இந்தோனேஷியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்று திரும்பிய மாணவர்களுக்கு சென்னை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் தமிழ்நாடு…

பெங்களூருவில் நடைபெற்ற இலங்கை, இந்தோனேஷியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்று திரும்பிய மாணவர்களுக்கு
சென்னை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் தமிழ்நாடு சார்பில் சென்னை
எண்ணூரை சேர்ந்த கே கே ஆர் சிலம்ப கலைக்கூடம் மாணவர்கள் 9 பேர் தங்கம் வென்றுனர். சென்னை வந்த வீரர்களுக்கு சிலம்பாட்ட கலைக்கூடம் சார்பில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சார்பிலும் எண்ணூர் ரயில் நிலையத்தில் உற்சாகமாக மேளதாளங்களுடன் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் சர்வே சர்வதேச சிலம்பாட்டம் போட்டி கடந்த 12 ஆம்
தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இலங்கை இந்தோனேசியா சிங்கப்பூர்
பெல்ஜியம் உள்ளிட்ட 9 நாடுகளிலிருந்து சப் ஜூனியர் ஜூனியர் சீனியர்
மாணவர்கள் கலந்து கொண்டு ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், சுருள்வால், வேல்
கொம்பு, மான் கொம்பு உள்ளிட்ட சிலம்பக் கலைகளில் தங்களது திறமைகளை
வெளிப்படுத்தி 14 தங்கப்பதக்கமும் இரண்டு வெள்ளி பதக்கமும் வென்று போர் வீரன்
என்ற டைட்டில் எண்ணூர் சிலம்ப கலைக்கூடத்திற்கும், சிறந்த வீரர்களுக்கான விருதும்
பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.