மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா குணமடைய வேண்டி அவரது தொண்டர்கள் பழனிமலை முருகனுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் இருந்த சசிக்கலா உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் பூரண குணமடைந்து திரும்ப வேண்டுமென, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சார்ந்த தொண்டர்கள் சிலர் பழனிமலை முருகனுக்கு பாத யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையையொட்டி அவரை வரவேற்க கொட்டாம்பட்டியிலிருந்து பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்த இவர்கள், சசிகலாவிற்கு திடீர் உடல்நல குறைவால் பழனி முருகனின் படை வீட்டிற்கு படையாக வேண்டுதலுடன் புறப்பட்டுள்ளனர்.கிட்டதட்ட 180கிமீட்டர் நடந்து சென்று கொண்டிருக்கும் அவர்கள் மொத்தம் 5நாள் பயணமாக சென்று கொண்டிருப்பதாகவும் தற்போது 3வது நாள் எனவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் நலம் பெற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.







