மகாராஷ்டிராவில் முதியவர் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கிருமிநாசினி தெளிப்பது பாராட்டுக்களை பெற்றுள்ளது.
கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கடும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றன. நமது அன்றாட பழக்க வழக்கங்கள் கூட மாறிவிட்டது. பண்டிகை நேரங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மறவாமல் பின்பற்ற வேண்டியது அவசியமாகி விட்டது. அந்தவகையில் இதுகுறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக முதியவர் ஒருவர் வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து மும்பையில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் முதியவரின் செயல் பலரையும் கவர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தன்னுடைய பங்களிப்பை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்த அவர், கிறிஸ்துமஸ் பரிசாக குழந்தைகளுக்கு சாக்லேட், பரிசு பொருட்களுக்கு பதிலாக முகக்கவசங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.







