தீப்பிடித்த கட்டடத்தில் இருந்து 25 நாய்களை காப்பாற்றிய இளைஞர் – குவியும் பாராட்டுக்கள்

தீப்பிடித்த கட்டடத்தில் ஏறி இளைஞர் ஒருவர், அதில் சிக்கி இருந்த நாய்களை ஒவ்வொன்றாக மீட்டு பாதுகாப்பாக கீழே வீசிய நிகழ்வு பலரையும் அச்சர்யப்படுத்தியுள்ளது. திடீர் விபத்துகள் அவ்வப்போது ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று என்றாலும்,…

தீப்பிடித்த கட்டடத்தில் ஏறி இளைஞர் ஒருவர், அதில் சிக்கி இருந்த நாய்களை ஒவ்வொன்றாக மீட்டு பாதுகாப்பாக கீழே வீசிய நிகழ்வு பலரையும் அச்சர்யப்படுத்தியுள்ளது.

திடீர் விபத்துகள் அவ்வப்போது ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று என்றாலும், அந்த நேரத்தில் அந்த விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது என்பது மிக முக்கியமான ஒன்று. அதிலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்படும் தீ விபத்துகளில் சிக்கிக்கொள்பவர்களை காப்பற்றுவது என்பது அவ்வளவு சாதாரண நிகழ்வு கிடையாது. மிகவும் கடினமான நிகழ்வுதான் என்றாலும், அங்கு ஒரு உயிர் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்தால், யாரும் தனது உயிரை பற்றியெல்லாம் யோசிக்காமல் ஓடிச்சென்று உதவுவார்கள். அது மனித உயிராகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

எப்படிப்பட்ட உயிரினமாக இருந்தாலும், அது மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கிறது என்று தெரிந்தாலே அதை முதலில் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் முதலில் நமக்கு தோன்றும். அப்படியான ஒரு நிகழ்வுதான் பெரு நாட்டில் உள்ள லிமா பகுதியில் நிகழ்ந்துள்ளது. அங்கு ஒரு பெரிய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 நாய்கள் சிக்கி கொண்டதாக தெரிகிறது. கட்டிடத்தை சுற்றிலும் தீ பரவியதால், அதில் சிக்கிய நாய்களை மீட்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த செபாஸ்டியன் அரியாஸ் என்ற இளைஞர், தீ விபத்தில் சிக்கிய அந்த நாய்களை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று தீப்பிடித்த கட்டிடத்தில் ஏறி அதில் சிக்கி இருந்த நாய்கள் ஒவ்வொன்றாக மீட்டு பாதுகாப்பாக கீழே வீசினார்.

அப்போது அந்த இடத்தில் வலையுடன் தயாராக நின்ற தீயணைப்பு வீரர்கள் அந்த நாய்களை பிடித்து காப்பாற்றினர். இந்த சம்பவத்தில் மொத்தம் 25 நாய்கள் மீட்கப்பட்டன. தனது உயிரை துச்சமென மதிக்காது துரிதமாக செயல்பட்டு செபாஸ்டியன் நாய்களை காப்பாற்றிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அவற்றை பார்த்த பயனர்கள் செபாஸ்டியனை ‘ரியல் ஹீரோ’ என்று பாராட்டியும் வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.