“நீ உன் தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நா அரசியலையே தொழிலா பண்றவன்..” – கவனம் பெறும் ‘கராத்தே பாபு’ பட டீசர்!

ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு வெளியாக ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரவி மோகன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றிக்கும் பிறகு இவர் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டு வந்தார். தொடர்ந்து அவர் தனி ஒருவன், மிருதன், டிக் டிக் டிக், கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து, இவர் நடித்துள்ள ‘ஜீனி’ திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையே, அவர் தன்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் எனவும், ரவி மோகன் என அழைக்குமாறும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

சமீபத்தில் இவர் வில்லனாக நடித்திருந்த ‘பராசக்தி’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இப்படத்தில் இவருடன் இணைந்து சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தொடர்ந்து, ரவி மோகனின் அடுத்த படத்தை ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். இப்படம் ரவி மோகனின் 34வது படமாக உருவாகிறது.

https://x.com/iam_RaviMohan/status/2014937336094851114

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மண்ட் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘கராத்தே பாபு’ என பெயரிடப்பட்டுள்ளது. சமீப நாட்களாக இப்படம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகமல் இருந்தது. இதற்கிடையே, இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வெளியான ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.