WPL 2024 டி20 தொடர் – முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி!

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின்  4-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.  மகளிர் பிரீமியர் லீக்கின் 2வது தொடர் பெங்களூரில்  பிப்-23 ஆம் தேதி…

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின்  4-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

மகளிர் பிரீமியர் லீக்கின் 2வது தொடர் பெங்களூரில்  பிப்-23 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரிலும் டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், உ.பி.  ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும்.  இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 4வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் மோதின.  முதலில் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி  20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி அணிக்கு 120 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. தனது எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வந்த டெல்லி அணி 14.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது.

உபி வாரியர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்வேதா ஷெராவத் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 45 ரன்கள் விளாசினார்.  டெல்லி அணியின் பந்துவீச்சில்  ராதா யாதவ் 4, மாரிஸேன் காப் 3, அருந்ததி ரெட்டி, அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.