இன்று உலக புவி தினம்! புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி!!

உலக பூமி நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பெருமானாட்டில் உள்ள தனியார் பள்ளி சார்பாக சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக புதுக்கோட்டை மாவட்ட…

உலக பூமி நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பெருமானாட்டில் உள்ள தனியார் பள்ளி சார்பாக சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை  பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியும், உலக பூமி மரம் போன்று வேடம் அணிந்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு பேரணியை பள்ளி செயலர் தேவி சுப்பிரமணியன், பள்ளி முதல்வர் பாப்பசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அவர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூமியை காக்கும் வகையில் கவிதைகளை மாணவர்கள் வாசித்தனர். இதை தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

— சே. அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.