உலகக்கோப்பை ஸ்குவாஷ் இறுதிப்போட்டி; எகிப்து- மலேசியா அணிகள் பலப்பரீட்சை!

உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதி போட்டியில் இந்தியா அணி மலேசியா அணியிடம் தோல்வி அடைந்ததையடுத்து ஜப்பானுடன் வெண்கலப் பதக்கத்தை பகிர்ந்துக் கொண்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரெஸ் அவென்யூ மாலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை…

உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதி போட்டியில் இந்தியா அணி மலேசியா அணியிடம் தோல்வி அடைந்ததையடுத்து ஜப்பானுடன் வெண்கலப் பதக்கத்தை பகிர்ந்துக் கொண்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரெஸ் அவென்யூ மாலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியின் முதல் அரை இறுதி போட்டியில் ஜப்பான் அணியும் எகிப்து அணியும் மோதின.

இதில் எகிப்துஅணி 6 க்கு 0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு அரை இறுதி போட்டியில் இந்திய அணியும் மலேசியா அணியும் மோதின.

இதில் 5 க்கு 0 என்ற புள்ளி கணக்கில் மலேசியா அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. முதல் அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்த ஜப்பானும், இரண்டாவது அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியாவும் வெண்கலப் பதக்கங்களை பகிர்ந்துக் கொண்டன. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் பலம் வாய்ந்த எகிப்து அணியும்
மலேசியா அணியும் மோதவுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.