உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அர்ஜென்டினா, நெதர்லாந்து போட்டியின் போது மைதானத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் போது அமெரிக்காவின் பிரபல விளையாட்டு செய்தியாளரான “கிராண்ட் வால்” மூச்சுக்குழாய் அழற்சியால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்றைய போட்டியின் போது கிராண்ட் வால் சுருண்டு விழுந்ததாகவும், அந்த நேரத்தில் அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, அவர் மூச்சுக்குழாய் பகுதியில் ஏற்பட்டுள்ள புறணி அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளதும், நுரையீரலுக்கு காற்றை எடுத்துச் செல்லுதலில் சிக்கல் இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா கால்பந்து சம்மேளனம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கிராண்ட் வால் உயிரிழந்தது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதனால் அமெரிக்காவில் உள்ள கால்பந்து ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வருந்துவதாகவும் இரங்கல் தெரிவித்துள்ளது.