தேசிய விளையாட்டு விருதுகள்: மனு பாக்கர், குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா வழங்கினார் குடியரசுத் தலைவர்!

உலக செஸ் சாம்பியன் வென்ற தமிழ்நாடு இளம் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

கடந்த ஆண்டு 2024 விருது வென்றவர்கள் பட்டியலை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இளம் உலக செஸ் சாம்பியனாகி தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷுக்கு ‘தியான் சந்த் கேல் ரத்னா விருது’ வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வெல்ல, நித்யஸ்ரீ, மற்றும் மனிஷா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தனர். இவர்கள் மூவரும் உலக மற்றும் ஆசிய அளவிலான பாரா போட்டிகளிலும் பதக்கம் வென்று சாதனை படைத்தவர்களாவர். இந்நிலையில், தமிழக வீரங்கனை துளசிமதி (22), நித்யஸ்ரீ (19), மற்றும் மனிஷா (19) ஆகிய அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

மேலும், ஹாக்கி ஆண்கள் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கௌர், பாரா தடகள வீரர் பிரவீன் குமார், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோரும் இன்று கேல் ரத்னா விருதினை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.