தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ படத்தில் விஜய் நடித்துள்ளார்.
இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
https://x.com/theVcreations/status/2009885809483362444
பொங்கலை முன்னிட்டு நேற்று (ஜனவரி 9) இப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தினால் வெளியாகவில்லை. இந்த நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளட்டோர் நடிப்பில் வெளியான தெறி படம் விரைவில் ரீரிலிஸ் ஆக இருப்பதாக தயாரிப்பாளர் எஸ்.தானு அறிவித்துள்ளார்.







