ஆசியக் கோப்பையை வெல்வது முக்கியம்! – ஷுப்மன் கில் பேட்டி

உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்வது மிகவும் முக்கியம் என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5…

உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்வது மிகவும் முக்கியம் என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கவுள்ள நிலையில், ஷுப்மன் கில் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஷுப்மன் கில் பேசியதாவது:

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது எங்களுக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால், நாங்கள் வெற்றி பெறும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். தொடர்ச்சியாக வெற்றி பெறுவது என்பது அவசியம். இந்த சூழலில் நாங்கள் ஓரிரு போட்டிகளில் தோல்வியடைந்தால் அது எங்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும். வங்கதேசத்துக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடியதாகவே உணர்கிறோம்.

நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார். இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி நாளை (செப்டம்பர் 17) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.