நடிகர் பரத் முதன் முறையாக ஹீரோவாக அறிமுகம் ஆன படம் காதல். தற்போது
பரத் வாணி போஜன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் love. பரத்துக்கு முதல் படம் காதல் என்றால் 50வது படம் Love. முதல் படம் ஹிட் கொடுத்த பரத்துக்கு 50வது படம் ஹிட் கொடுக்குமா என்று பார்க்கலாம்.
படத்தின் கதை
பரத் வாணி போஜன் காதலர்களாக இருந்து திருமணம் பண்றாங்க. திருமணத்திற்குப் பின் தினமும் சண்டை. ஒரு கட்டத்துல பரத் வாணிய கொலை செஞ்சுராரு.
ட்ரெய்லர் வெளியான உடன் மொத்த படத்தையும் ட்ரெய்லர்-ல காட்டிடாங்கனு நிறையா comments வந்துச்சு. அது என்னமோ உண்மை தாங்க படத்தோட ஃபர்ஸ்ட் half வர அப்படி தான் இருந்துச்சு. ஆனா 2nd half-ல தாங்க படத்தோட மொத்த twist-ம் இருந்துச்சு. Unexpected twist-ன்னு சொல்லலாம்
மலையாளம் Remake
ஷைன் டாம் சாக்கோ மற்றும் ரஜிஷா விஜயன் நடிப்பில் 2020ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான love திரைப்படத்தைத் தமிழில் remake செய்து உள்ளனர். தமிழ் remake-ல் பிரபல வசனகர்த்தாவான R.P. பாலா தயாரித்து இயக்கி உள்ளார். படத்துடைய போஸ்டர் முதல் வசனங்கள் வரை எதுவும் மாறவில்லை. கடைசி சீன் மட்டும் ஒரு ஃபிளாஷ் பேக் உள்ளது. மற்றபடி படத்தை அப்படியே பிசுறு தட்டாமல் remake செய்து உள்ளனர்.
நடிப்பு, இசை, மேக்கிங்
படம் ஆரம்பித்த அடுத்த 20 நிமிடம் முதல் பிணமாகவே நடித்திருக்கிறார் வாணி போஜன். பிணமாக நடித்து விடலம் ஆனால் கண் சிமிட்டல் பிணமாக நடிப்பது கொஞ்சம் கடினம் தான். இதில் தனது நடிப்பை அற்புதமாக வெளிபடுதி இருக்கிறார்.
பரத் நடிப்பை பற்றி சொன்னால் படத்தோட 2nd half பற்றி சொல்ற மாதிரி வரும் அதுனால நல்லா நடிச்சிருக்காரு.
காதல் மோதல் சண்டை கொலை இப்படி 4 வகையான காலங்களை காட்டுகிறது love திரைப்படம். இந்த 4 வகையான காலங்களுக்கு ஏற்றார் போல் அற்புதமான இசையை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ரோனி ரபேல்.
படத்துடைய மேக்கிங் பொறுத்தவரை நிறையா close up shots உள்ளது. அந்த close up shots-ல பிணமாக நடித்திருக்கும் வாணி கண்ணசைக்காமல் இருப்பது படத்தை எங்கேயோ கொண்டு போகிறது. இதை தாண்டி படத்தில் title போடுர சீன் மாஸ். கேமரா வொர்க் பக்கபலமாக படத்திற்கு இருந்தது. DOP P.G. முத்தையாவிற்கு வாழ்த்துக்கள்.
பரத் 50
இதுவரை பரத் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் என்றும் சொல்ல முடியாது சொதப்பல் என்றும் சொல்ல முடியாது. ஆனால் இந்த love படத்தில் கதையை கொரை சொல்ல முடியாது . நல்ல கதையை choose பண்ணி நடிசிருக்காரு. இது மாதிரியான கதையை choose பண்ணினாள் நன்றாக இருக்கும்.
மொத்தத்தில் இந்த படத்தைத் திருமணம் ஆனவர்கள் தியேட்டரில் பார்ப்பது நல்லது. பரத்தின் 50வது படம் ஹிட் கொடுக்குமா என்று பார்க்கலாம்.







