நாடளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடிகர் விஜய் அறிவிப்பார் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் வேலுநாச்சியாரின் 249வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாலை அனிவித்து மரியாதை செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்த கருத்துகள்:
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தளபதி அறிவிப்பார். விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே மக்களுக்கான பல்வேறு சேவையில் தளபதியின் ஆனைக்கினங்க ஈடுபட்டுவரும் சூழலில் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபடுவோம்.







