தமிழநாட்டின் ரியல் சூப்பர் ஸ்டார் வீரமுத்துவேல் தான் என நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் திருவிக வீதியில் வசிக்கும் சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை முன்னிட்டு முன்னிட்டு காமெடி நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்துடன் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த வீரமுத்துவேல் தமிழ்நாட்டிறகே பெருமை தேடி தந்துள்ளார். மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். தமிழ்நாட்டில் அடுத்த பத்து ஆண்டுகளில் போதை பொருள் முழுமையாக ஒழிக்கப்படும். முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதால் போதை என்ற வார்த்தை இல்லாத அளவிற்கு தமிழ்நாடு மாறும்.
தமிழ்நாட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு பதிலளித்த ரோபோ சங்கர் அடுத்த சூப்பர் என்று என்னை கேட்டால் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறுவேன். என்னை பொறுத்தவரை ரியல் சூப்பர் ஸ்டார் வீரமுத்துவேல் தான் பெருமிதம் தெரிவித்தார்.