சென்னையில் எங்கெங்கு தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தலாம்?

சென்னையில் எங்கெங்கு தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தலாம்? என்பதற்கான இடங்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. வாக்குபதிவு மின்னணு இயந்திரங்கள் இன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.…

சென்னையில் எங்கெங்கு தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தலாம்? என்பதற்கான இடங்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

வாக்குபதிவு மின்னணு இயந்திரங்கள் இன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. மின்னணு இயந்திரத்தில் சின்னம் பொறிக்கும் பணி தொடங்கப்படும். எனவும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் மட்டும் 198 பதற்றம் மற்றும் மிகவும் பதற்றமான வாக்குசாவடிகள் உள்ளதாகவும், சென்னையில் உள்ள பதற்றமான வாக்குசாவடிகளின் எண்ணிக்கை 1243 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: நீட் விலக்கு சட்டம்: ஆளுனர் உடனே ஒப்புதல் தர வேண்டும்! – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

மேலும், வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் சிசிடிவி பொறுத்தும் பணி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணும் மையங்களில் இரும்புக் கம்பிகளை கொண்டு தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதாகவும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி பிப்ரவரி 10 அன்று நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் எங்கெங்கு தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தலாம்? என்பதற்கான இடங்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.