ஜீவா நடிக்கும் ‘அகத்தியா ‘ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போது? – படக்குழு புதிய அப்டேட்!

அகத்திய படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு வெளியான ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் ‘சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரௌத்திரம், கலகலப்பு 2, கீ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘பிளாக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘அகத்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.  இந்த படம் வரும் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அகத்தியா படத்தின் முதல் பாடல் யுவன் சங்கர் ராஜா குரலில் வெளியானது காற்றின் விரல் எனும் இப்பாடலை பா.விஜய் எழுதியிருந்தார்.
The teaser of Jeeva's #Aghathiyaa is out!
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, டிரெய்லர் நாளை காலை 11 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த டிரெய்லரை ஆரியா, கவுதம் மேனம், ஹாரிஸ் ஜெயராஜ், குஷ்பு உள்ளிட்டோர் வெளியிட உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.