’லப்பர் பந்து’ படத்தின் #Trailer மற்றும் #Release எப்போது? – படக்குழு அறிவிப்பு!

’லப்பர் பந்து’ படத்தின் ட்ரெய்லர்  மற்றும் ரிலீஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளது. நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை…

’லப்பர் பந்து’ படத்தின் ட்ரெய்லர்  மற்றும் ரிலீஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதேபோல இந்த படத்திற்கு  ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனி ஆடியோ உரிமை பெற்று உள்ளது. படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி லப்பர் பந்து திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல இப்படத்தின் ட்ரெய்லர் வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.