‘தக் லைஃப்’ ரிலீஸ் தேதி சொன்ன கமல்ஹாசன்!

மணிரத்னம் இயக்கத்தில் தனது நடிப்பில் உருவாகியுள்ள ’Thug Life’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-3, மற்றும் கல்கி-2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

தொடர்ந்து அன்பறிவ் இயக்கத்தில் KH 237 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அமெரிக்காவிற்கு ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க சென்றிருந்த கமல்ஹாசன், கடந்த 5 மாதங்களாக இந்தியா பக்கம் தலைகாட்டவே இல்லை.

இந்நிலையில் இன்று 5 மாதகால படிப்பு முடிந்து கமல்ஹாசன் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,  ”Thug Life படம் வருகிற ஜூன் 5-ந்தேதி வெளியாகும் எனக் கூறினார். பின்னர் விக்ரம் 2 படம் வருமா? என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, நான் வேறு ஒரு புதிய திரைக்கதையை எழுதிட்டு இருக்கேன்.” எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.