கங்குவா டிரெய்லர் எப்போது? வெளியான லேட்டஸ்ட் update!

சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா படத்தின் டிரெய்லர் ஆக.12ம் தேதி வெளியாகி என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி,…

சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா படத்தின் டிரெய்லர் ஆக.12ம் தேதி வெளியாகி என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் டீசர் மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்தனர். தொடர்ந்து, ஃபர்ஸ்ட் சிங்கள் கடந்த மாதம் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இத்திரைப்படத்தின் டிரெய்லர் ஆக.12ம் தேதி வெளியாகி என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.