#OnceMore படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? வெளியான அப்டேட்!

‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மிஸ் ஒருத்தி’ என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ்.…

‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மிஸ் ஒருத்தி’ என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தும் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இதனையடுத்து, அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். ‘குட் நைட் ‘ மற்றும் ‘லவ்வர்’ திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு ‘ஒன்ஸ் மோர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘மிஸ் ஒருத்தி’ என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.