பீட்சா 3 திரைப்படம் எப்போது ரிலீஸ்?… லேட்டஸ்ட் அப்டேட்!

பீட்சா 3 திரைப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.  ஹாரர் த்ரில்லரில் உருவாகி வெளியான ‘பீட்சா ’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வெளியான இரண்டாம் பாகமும்…

பீட்சா 3 திரைப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

ஹாரர் த்ரில்லரில் உருவாகி வெளியான ‘பீட்சா ’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வெளியான இரண்டாம் பாகமும் வெற்றிப்பெற்ற நிலையில் அடுத்ததாக உருவாகியுள்ளது ‘பீட்சா 3’ தி மம்மி.  இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் அஷ்வின் நடித்துள்ளார். இந்த படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார்.

இவர்களுடன் காளி வெங்கட், இயக்குநர் கவுரவ் நாராயணன், ரவீனா தஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பீட்சா 3 திரைப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

https://twitter.com/ThirukumaranEnt/status/1682397574437949440?s=20

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.