#MirchiSiva நடித்த ‘சுமோ’ திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள சுமோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் படங்களில் நகைச்சுவை ஹீரோ பாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம்…

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள சுமோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் படங்களில் நகைச்சுவை ஹீரோ பாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் மிர்ச்சி சிவா. இவர் நடித்த தமிழ் படம், தமிழ் படம் 2, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் சிவாவின் கதாபாத்திரத்தை பார்க்கும் அனைவரும் சிரிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்.


இந்த நிலையில் நடிகர் சிவா இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2019ம் ஆண்டே இப்படத்தை படக்குழு தொடங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.


இந்நிலையில், ‘சுமோ’ திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்டோபர் 18 ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.